Thursday, April 4, 2019

சருமம் பொலிவுடன் திகழ


‘எண்ணெய் தடவுதல்’, நமக்குப் பல வகைகளில் பலன் தருகிறது. சருமம் மெருகேறும். தேவையற்ற செல்கள் உதிர்ந்துவிடும். எண்னெய் தடவுவதால், . 50 வயதினரைக் கூட, 30 வயது என்று சொல்லுமளவு இளமைப் பொலிவு இருக்கும். சருமத்தில் சுருக்கம் விழுவது தடுக்கப்பட்டு, எப்போதும் இளமையாக இருக்கும். 

இரட்டை நாடி இருப்பவர்களும், முகத்தில் சதை இருப்பவர்களும் 30 வயதிலிருந்தே எண்ணெய் மசாஜை ஆரம்பித்துவிட வேண்டும். சிலருக்கு வெயிலில் போய்விட்டு வந்தால், உடலெல்லாம் கருத்துவிடும். நிறம் மங்கி, ‘டேன்’ ஆனவர்கள், ‘குங்குமாதி தைலத்தை’ உபயோகிக்கலாம். இது ‘ஆன்டி டேன்’ ஆக பயன்படும். தினசரி இரவு படும் முன், முகம் மற்றும் உடலில் சூரியக் கதிர்கள் படும் இடங்களிலெல்லாம் இந்தத் தைலத்தைத் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இரண்டு வாரம் தடவினாலே, வெளியில் போகும்போது சூரியனால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைந்துவிடும். 

அதேபோல, பலருக்கு அலர்ஜியும் அரிப்பும் பெரும் தொல்லையாக இருக்கின்றன. அதிலும் பெண்களுக்கு, 45 வயதுக்கு மேல், மெனோபாஸ் ஆனபிறகு, சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. இதனால் அரிப்பும், நிறம் மாறுதலும் உண்டாகின்றன. சிலருக்கு நிறமே கருப்பாக மாறிவிடும். இதைத் டஹ்டுக்க, தோலில் ஈரப்பதம் இருக்கவேண்டும். அந்த ஈரப்பதம், எண்ணெய் தடவுவதால்தான் வரும். இவர்களுக்கு ‘தூர்வாதி தைலம்’ என்ற எண்ணெய் சிறந்த பலன் தரும். ஒருவகை தர்ப்பை புல்லைப் போட்டுக் காய்ச்சிய இந்தத் தைலத்தையும் ஏற்கெனவே குறிப்பிட்ட குங்குமாதி தைலத்தையும் ஒன்றாகக் கலந்து, கை, கால்களில் தேய்த்து வந்தால், சருமத்தில் ஏற்பட்ட கருமை மாறிவிடும். சரும வறட்சி குறைந்து, அரிப்பு நின்றுவிடும்.
சருமம் பொலிவுடன் திகழம்



Tuesday, April 2, 2019

மாதத்திற்கு இரண்டு கிலோ எடை குறைய வேண்டுமா? மதிய உணவாக பார்லி உண்ணுங்கள்

பார்லி வெஜிடபிள் ரைஸ்
தேவையானவை: பழுப்பு நிற பார்லி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடமிளகாய், கேரட் போன்ற நார்ச்சத்துள்ள காய்கறிகள், பட்டை, இலை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எண்ணெய்.
செய்முறை: பார்லியை புலவு செய்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் கழுவி, ஊறவைக்கவும். பிறகு, ஒரு பங்கு பார்லிக்கு 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் சேர்த்து, சாதம் வடிப்பது போலவே பார்லி சாதம் வடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, பார்லியைச் சேர்த்து, நன்கு வெந்ததும், கஞ்சியை வடித்துவிடவேண்டும். பொதுவாகவே, சாதம் வடிக்கும்போது, கஞ்சியை வடித்துவிட்டால், அதிலிருக்கும் ‘ஸ்டார்ச்’ போய்விட்டாலே, உடலுக்கு நல்லதுதான். ஊளைச்சதை குறையும். வடித்த பார்லி சாதத்தை, ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆறவிடவும். காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். 
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி என ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பிறகு, நீளவாக்கில் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, துளி உப்பு சேர்த்து, ஒரு வதக்கு வதக்கவும். அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். காரம் அதிகம் தேவைப்பட்டால், கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். முக்கால்வாசிப் பதம் வெந்தபிறகு, ஏற்கெனவே வேகவைத்த பார்லியை எடுத்துப் போட்டுக்கிளறி, அடுப்பை ஸிம்மில் வைத்து, மூடிவைத்து, ‘தம்’ கட்டலாம். இதனால், நிதானமாக தண்ணீர் வற்றி, காய்கறிகளின் சுவை பார்லியில் இறங்கி, அதிக ருசியாக இருக்கும். இடையிடையே அடிபிடிக்காமல் கிளறிவிடலாம். இது மதிய உணவுக்கு நல்ல சாய்ஸ்.  
குறிப்பு: 
* வெள்ளை பார்லியை உபயோகிப்பதென்றால் அதை ஊறவைக்கத் தேவையில்லை. அப்படியே கழுவி விட்டு உபயோகிக்கலாம். 
* பார்லி சாதம் வடித்த கஞ்சியில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, வீட்டில் இருக்கும் முதியோர் அல்லது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். நல்ல உடல் பலத்தைக் கொடுக்கும்.
* பார்லியை வெறும் வெள்ளை சாதமாக வடித்து, நாம் தினமும் செய்யும் காய்கறி, குழம்போடும் சாப்பிடலாம். 

பயன்கள்:
* இந்த பார்லி வெஜிடபிள் புலவை தினசரி மதிய உணவாகச் சாப்பிட்டு வந்தால், மாசத்துக்குக் குறைந்தபட்ச, தலா 2 கிலோ குறையும். பார்லியின் மருத்துவ குணம் என்னவென்றால், கொழுப்பைச் சுரண்டி எடுத்தல் (கரைத்தல்) மற்றும் கொழுப்பை வளர விடாமல் குறைத்தல். இது போன்ற குணங்களை உடைய பார்லியைச் சாப்பிடுவதால், நிச்சயமாக உடலில் இருக்கும் ஊளைச்சதை குறையும். 
* பல பெண்களுக்குக் காலையில் போடும் பிளவுஸ் சரியாக இருப்பதாகவும் மாலையில் இறுக்கமாகி விடுவதாகவும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மாலையில் உடல் ஊதும். இப்படி வந்தால், தேவையில்லாத கெட்ட நீர் உடலில் சேர்கின்றது என்று அர்த்தம். இது போல கெட்ட நீர் சேர்பவர்களுக்கு, தினமும் மதியம் பார்லி அரிசி உணவைச் சாப்பிட்டு வர, மாலையில் உடலில் கெட்ட நீர் சேராது. 
* அரிசி சாதத்தை விட, பார்லி சாதம் ‘லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ கொண்டது. ரத்தத்தில் சீக்கிரமாக சர்க்கரையை வெளிவிடாது. 

Saturday, March 23, 2019

அருகம்புல் ஜூஸ்! நல்லதா ,கெட்டதா?



எப்படி ஒரே மருந்து எல்லாவித பிரகிருதிகளுக்கும் பொருந்தாது என்பதற்கு  ஒரு அருமையான உதாரணம் அருகம்புல் ஜூஸ். காலையில்  கடற்கரையில் வாக்கிங் போகும் பலரும் அருகம்புல் ஜூஸை குடிப்பார்கள்.. இது மூலிகையில் இருந்து எடுத்த ஜூஸ் அதனால் உடம்புக்கு மிகவும் நல்லது  என்று பலரும் நினைப்பதுண்டு.
அருகம்புல் நல்லதுதான் ஆனால் யாருக்கு நல்லது? பித்த உடம்புகாரர்களுக்கு மிகவும் நல்லது. இதிகாசத்தில் இதைப்பற்றி ஒரு கதையே உண்டு .
அனலாசுரன் என்ற ஒரு அசுரனை பிள்ளையார் விழுங்க அவர் தொப்பை முழுவதும் பற்றி எரிந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது எதிலும்  குறையாத இந்த எரிச்சல் அருகம்புல் ஜூஸை குடித்ததால் குறைத்தது என்ற ஒரு குறிப்பு உண்டு.
அருகம்புல்லிற்கு "ஹீமோஸ்டேடிக்"  என்ற ஒரு குணம் உண்டு அதாவது ரத்தத்தை உறையச் செய்யும் குணம் அதனாலேயே அதிக ரத்தப்போக்கு உடைய பெண்களுக்கு அருகம்புல் ஜூஸ் குடித்தால் ரத்தப்போக்கு கட்டுப்படும்.
இதய நோய் உள்ளவர்களுக்கு "பிளட் தின்னர்"  மருந்து கொடுப்பார்கள் அதாவது ரத்தம் ரத்தக்குழாய்களில் உறையாமல் இருப்பதற்கான மருந்து கொடுப்பார்கள். இதுபோன்ற மருந்தை எடுக்கும் வயதானவர்கள் உடம்புக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டு அருகம்புல் ஜூஸ் குடிக்க
அவர்கள் எடுக்கும் பிளட் தின்னரும் ,அருகம்புல் ஜூஸும் வினைப்பயன் புரிந்து உயிருக்கே வேட்டு வைக்கலாம்.
அதனால் நல்லது என்று நினைத்துக்கொண்டு கண்டதையும் சாப்பிடாமல் எந்த ஒரு மருந்தையும் மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும். அதேபோல் டிவி ஷோக்களில் வரும்  மூலிகை மருந்துகளை நமக்கு நல்லது என்று எண்ணிக்கொண்டு சாப்பிட வேண்டாம்.

Thursday, January 7, 2016

ஆயுர்வேத சமையல் வருமுன் தடுப்பதற்கும், வந்தபின் தீர்ப்பதற்கும்!

ஆயுர்வேத சமையல்
வருமுன் தடுப்பதற்கும், வந்தபின் தீர்ப்பதற்கும்!
கொடும்புளி ரசம்

நாம் தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம், பருப்பு ரசம் என பல வகை ரசங்கள் செய்வோம். ஒவ்வொன்றுமே ஒரு மருத்துவ குணம் உடையதுதான். இந்த கொடும்புளி ரசம், உடல் பருமன் உள்ளவர்களுக்கு, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் ரசம். நல்ல ஜீரணமும் ஆகும். இதை சமஸ்கிருதத்தில் ‘கோகம்’ என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் ‘கார்சீனியா’ என்பார்கள். நீங்கள் எந்த ஒரு ‘வெயிட் லாஸ்’ மருந்தை எடுத்துக்கொண்டாலும், அதில் உள்ள பொருட்களின் பட்டியலில் முதல் பெயராக கார்சீனியா தான் இருக்கும். ஏன் என்றால், கொழுப்பைக் கரைப்பதில் இதன் பங்கு அதிகமாகவே உண்டு.

தேவையானவை: கொடும்புளி & ஒரு நெல்லிக்காய் அளவு உருண்டை, சுக்கு & ஒரு சிறிய துண்டு (50 கிராம்), மிளகு & 50 கிராம், திப்பிலி & 25 கிராம், ‘ராக் சால்ட்’ எனப்படும் உப்பு & ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி & ஒரு பிடி, பூண்டுப் பல் & 5. தாளிக்க: பசு நெய் & அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை & மூன்றும் தாளிக்கத் தேவையான அளவு.
செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி & இவை மூன்றையும் கரகரப்பாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். கொடும்புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை நசுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் நெய்யை விட்டு, தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து, கரைத்து வைத்திருக்கும் ரசம், பொடித்து வைத்திருக்கும் ரசப்பொடியில் ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, உப்புப் போட்டு கொதிக்கவிட வேண்டும். கொதிக்கும்போது, கொத்தமல்லித் தழையைப் போட்டு இறக்கவும்.
குறிப்பு: அயோடைஸ்டு உப்பு பயன்படுத்தக் கூடாது.

பயன்கள்:
* சாப்பிட்ட உணவு செரிக்காமல், வயிறு உப்புசமாக, அதனால் உடல் கனமாக இருப்பது போலவும் உணர்பவர்களுக்கு இந்த கொடும்புளி ரசம் நலல் மருந்து. தினமும் இதைச் சாப்பிட்டு வர, ஜீரணசக்தி மேம்படும்.
* தொப்பை நன்றாகவே குறையும். குண்டான பெண்களுக்கு, தொடை மற்றும் பின்பக்கத்தில் சேர்ந்திருக்கும் சதையும் குறையும்.
* ‘திரிகடுகம்’ எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி எடையைக் குறைக்க மிகவும் உதவும். உடலின் ‘வளர்சிதை மாற்றம்’ சீர்படுவதற்கு இந்தத் திரிகடுகம் மிகவும் உதவும். ‘திரிகடுக சூரணம்’ எப்போதுமே கைவசம் வீட்டில் இருந்தால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தமான எந்தவிதமான பிரச்னைகளும் அணுகாது.
* உடல் எடை நாளுக்கு நாள் அதிகமாகி, வேலை செய்ய முடியாமல் மந்தமாக, சோம்பி இருப்பவர்கள், தினமும் கொடும்புளி வைத்துச் சாப்பிடவேண்டும்.

Wednesday, December 23, 2015

ராகி சாலட் என்பது மிகவும் சத்தான ஓர் உணவு. பொதுவாக நாம், முளைவிட்ட பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சால்ட் செய்து சாப்பிடுவோம். ஆனால் சிலருக்கு இவை வயிற்றை உப்புசமாக்கி, வாய்வுத் தொந்தரவை உண்டாக்கிவிடும். ஆனால், முளகட்டிய கேழ்வரகில் இந்தப் பிரச்னை இல்லை. மிகுந்த சத்து கொண்டதும் கூட. 

ராகி சாலட்
தேவையானவை: கேழ்வரகு & அரை கப், பொட்டுக்கடலை & 2 டேபிள்ஸ்பூன், தக்காளி & 1, சின்ன வெங்காயம் & 4, 5, எலுமிச்சம்பழச் சாறு & தேவையான அளவு, மிளகுத்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, கொத்தமல்லித் தழை & ஒரு பிடி.  
செய்முறை: கேழ்வரகை நன்கு கழுவி, சுத்தம் செய்து 12 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, மெல்லிய வெள்ளைத் துணியில் தளர்வாகக் கட்டித் தொங்கவிடவும். ஒரு நள் முழுதும் (24 மணி நேரம்) இப்படித் தொங்கவிடும்போது, கேழ்வரகு நன்கு முளை விட்டிருக்கும். இதைத்தான் சாலட் செய்யப் போகிறோம்.  
6 டேபிள்ஸ்பூன் முளைவிட்ட கேழ்வரகை எடுத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியைச் சேர்த்து, பொட்டுக்கடலையையும் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். பிறகு உப்பு, மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்துவிடலாம். 
குறிப்பு: 
* இந்த சாலட்டில் புரோகோலி சேர்த்துக்கொள்ள விரும்பினால், அதையும் சேர்க்கலாம். ஒரு தூண்டு புரோகோலியை எடுத்து நன்கு துருவி, சாலட்டில் சேர்க்கவேண்டும்.
பயன்கள்: 
* கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகம். முளைவிட்ட கேழ்வரகில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அந்த இரும்புச்சத்தை நம் உடல் முழுமையாக கிரகிக்க உதவுகிறது. வெறும் இரும்புச்சத்து மட்டும் உள்ள உணவைச் சாப்பிடுவதை விட, அதை வைட்டமின் சி & இருக்கும் உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, இன்னும் நன்றாகக் கிரகிக்கப்படும். 
* பொட்டுக்கடலை, மிக எளிதாக செரிக்கக் கூடிய புரதச் சத்து. உடலிலும் எளிதாகச் சேரும்.
* வெங்காயம், தக்காளி, புரோகோலி, கொத்தமல்லி எல்லாமே நார்ச்சத்துடைய பொருட்கள். எடைக்குறைப்புக்கு நன்கு உதவக் கூடியவை. நார்ச்சத்துள்ள பொருட்கள் பொதுவாக, கொழுப்பைக் கரைக்கக் கூடியவை. 
* மாலை வேளைகளில், பசிக்கும் சமயத்தில் என்ன சாப்பிடுவது எனத் தெரியாமல் தட்டை, மிக்சர் என எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிடுவதை விட, இதுபோன்ற ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால், எடை குறைய உதவுவதுடன், சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.



Monday, September 7, 2015

ஆறு சுவைகள் அவசியம் தேவை

நம்முடைய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறையில், அறுசுவை உணவே,சமச்சீரான உணவ ாகச் சொல ்ல ப்படுகிறது. இனிப்பு, ப்பு, உப்பு, காரம்,கசப்பு, துவர்ப்பு என ஆறு சுவை உணவுகளைச் சாப்பிடும்போது, அவைஏழு விதமான தாதுக்களை போஷிக்கும். இதில் ஏதேனும், ஒரு சுவையைத் தவிர்த்து வந்தா லும், உடலில் மாற்றங்கள் ஏற்படும். இதனால்தான், வருடப்பிறப்பு அன்று, வெல்லம்,மாங்காய்,புளி,உப்பு,வேப்பம்பூ என அனைத்துச் சுவைகளும் கலந்த,பச்சடியை செய்வார்கள். வருடம் முழுவதும், ஆறு சுவைகளையும் சேர்த்துக்கொள்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள். உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த ஆறு சுவைகளுமே பஞ்சபூதஙகளின் தன்மையால் ஆனவை. இனிப்பு உடலுக்குச் சக்தியையும் மனதுக் குஇனிமையையும் தரக்கூடியது. இனிப்பை முதலில் சாப்பிட்டே ஆகாரத்தைத்தொடங்க வேண்டும். இதனால், கபதோஷம் உண்டாகும். கடைசியாகச் சாப்பாட்டை முடிக்கும்போது, துவர்ப்பு சாப்பிடுவதால், அது இனிப்பை பேலன்ஸ் செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.உடைந்த எலும்பை ஒன்று சேர்க்கும். மூளையில் செரட்டோனின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கும். ரிபைண்ட் செய்யப்பட்ட சர்க்கரை, இனிப்புச் சுவையின் பலனைத் தராது. இனிப்பு என்றால், பனைவெல்லம் , நாட்டுச்சர்க்கரை, தேன்,பசு நெய் இவைதான்.அளவோடு சாப்பிடவேண்டும். நாம் செய்வதோ,சர்க்கரையையும் க்ளுகோசையும் வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துகோள்கிறோம். அதிகமானால்... உடலில் கபதோஷம் பெருகும். இதனால்,உடல் பருமன், நுரையீரல் சம்பந்தப்பட்ட ய்கள், அஜீரணம், மேக நோய், முன்கழுத்துசுரப்பி வீக்கம். சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வரலாம். வெறும் இனிப்புச் சுவைமட்டுமே சாப்பிட்டு வளரும் குழளுக்கு, பிற்காலத்தில் ,உடற்பருமனோடு வளரும்.ஆஸ்த்மா தொல்லைகள் கூட வரும். குறைந்தால்... பித்தம்,சூடு அதிகரிக்கும்.இதனால்,சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதனைத்தவிர்க்க,பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை , தேன்,நுங்கு சேர்த்துக்கொள்ளலாம். இனிப்புத்திராட்சை மாதவிலக்கைச் சீராக்கும். உலர்திராட்சை இதயத் துடிப்பைச் சீராக்கும். இனிப்புச் சுவையுள்ள செவ்வாழை கண் பார்வையைக் கூர்மையாக்கும். கொய்யா,எலும்பை உறுதியாக்கும். புளிப்பு ஜீரணமண்டலம் நன்கு செயல்பட புளிப்பு தேவை. எலுமிச்சை, புளி , கொடும்புளி, மாதுளங்கம், மாங்காய், அன்னாசிப்பழம், மோர் இவற்றின் மூலம் புளிப்பைப் பெறலாம். மிதமான அளவேஎடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றிலிருந்து பெறப்படும் புளிப்பு, உடல் வளர்ச்சிக்கு உதவும். மிதமாகப் புளித்த இட்லி,தோசை மாவு,மோர் இவற்றால், உணவை ஜீரணிக்கும் என்சைம்கள் கிடைக்கும். அதிகமானால்... இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், ஒவ்வொரு நாளும் அதில், நொதித்தல் நடக்கும். இது மறைமுகமாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். இன்று அரைத்து நாளை சாப்பிடுவதுதான் நல்லது.அதே கதைதான் புளிப்பான மீன் குழம்பும்.நேற்று வைத்த மீன் குழம்பு நாளை சாப்பிடுவது மஹா கேடு! புளிக்குழம்பு,காரக்குழம்பு அதிகம் சேர்த்தாலும், பித்தம் அதிகரிக்கும் .இதனால், ரத்தம், தசைகளில் புளிப்புத்தன்மை ஏறி, உடல் வலி, சரும வறட்சி, சரும நோய்கள் வரலாம். குறைந்தால்... ஜீரண சக்தி குறையும். மந்தத்தன்மை அதிகரிக்கும். அசதி, சோர் வு இருந்துகொண்டே இருக்கும்.கொஞ்சம் சோம்பேரி குழ்ந்தைகளுக்கு புளிப்பான ஆரஞ்சு கொடுக்க சுறுசுறுப்பாவாரகள் உப்பு அயோடைஸ்டு உப்பு, தாதுக்களை எ ல்லாம் பிரித்து விட்டு, வெறும் அயோடினை மட்டுமே சேர்த்துத் தரும் அயோக்கியதனம் இதைச் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை. கடல் ஒரங்களில் கிடைக்கும் காய்கறிகள், மீன்கள், பால் இவற்றிலேயே அயோடின் இருக்கிறது அதனால் சேர்த்த அயோடின் உப்பு தேவையற்றது. சிப்ஸ், லேஸ், குர் குரே பர்கர் போன்றவற்றைச் சாப்பிட்டாலோ, சோடா, ப்ரிசர்வ்டு ஃபுட் குடித்தாலோ அல்லது சாப்பிட்டடாலோ, மோனா சோடியம் குளுட்டமேட் (MSG) கலந்த உணவுகளைச் சாப்பிட்டாலோ உடம்பில் சோடியம் கலந்த உப்பு சேர்ந்துகொண்டே இருக்கும். சோடியம் உப்பு சிறுநீரகத்தில் பிரச்னைகளை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உணவுக்குச் சுவை தருவது மட்டுமல்ல, எலும்பு மற்றும் மஜ்ஜைகளை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும்,நாட்டு மருந்துக் கடையில் ‘சைந்தலவணம்’ என்ற உப்பை வாங்கிப் பயன்படுத்தலாம். சோடியம் ,பொட்டாசியம் போன்ற எல்லா தாது உப்புக்களும் அதில் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதிகமானால்... உடலில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். தேவை இல்லாத நீர் சேரும். ரத்தத்தை நீர்த்து போகச் செய்யும். பித்தத்தை அதிகரித்து, சீக்கிரமே நரை முடி, முடிஉதிர்தல், கொட்டுதல், வழுக்கை போன்ற பாதிப்புகள் வரும். எனவே, உப்பு அளவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தால்... உப்பு சாப்பிட்டால் தப்பு என்று, உப்பைக்குறைத்துவிடவும் கூடாது. இதனால், எலும்பு மஜ்ஜை வலுவிழந்து போகும்.சிலருக்கு தூக்கத்தில் கெண்டைக்காலில் தசைப்பிடிப்பு ஏற்படும். தசைகள் சோர்வடையும். தலைசுற்றல் வரும். காரம் காரம் என்றாலே, காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய் என்று ஆகிவிட்டது. மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கடுகு போன்றவை யும் காரச் சுவைதான். காய்ந்த மிளகாயைத் தவிர்த்து,மற்ற காரப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.ஆனால் இப்பொழுது பீட்சாவில் டாப்பிங்க் என்று சொல்லி தருவது தீமை விளைவிக்கும் மிளகாய் விதைகளையே! காரச் சுவை உடல் பருமனைக்குறைக்கும். மலத்தை இளக்கும். உடலைத்தூய்மையாக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். வலிமையைப் பெருக்கும்.குடல் புழுக்களை அழிக்கும். அதிகமானால்... உடலில் காரத்தன்மை அதிகமாகும் .ஆண்களுக்கு மலட்டு தன்மை அதிகரிக்கலாம். பலத்தைக் குறைத்து, பலவீனத்தை அதிகப்படுத்தும். இடுப்பில் தேவையற்ற வலிகள் உண்டாகும். மிளகு, பெருங்காயம், இஞ்சி, சித்த ரமூலம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் காரம் உடலுக்கு நல்லது. குறைந்தால்... சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்குக்காரத்தைக்கொடுத்து வளர்க்க வேண்டும். நிறைய பேர் “என் குழந்தை காரமே சாப்பிடமாட்டா” என்று பெருமையாகச்சொல்வார்கள். இது தவறான பழக்கம்.இனிப்பு ம ட் டு மே சாப்படு ம் .குழந்தைகளுக்கு, குடல் புழுக்கள் உருவாகும். இதனால், சரும ந�ோய்கள் , சரியான வளர்ச்சி இன்மை, சளி, இருமல், அலர்ஜி,ஆஸ்துமா போன்ற ந�ோய்கள் வரும். அந்தமாதிரி குழந்தைகளுக்கு இனிப்பு சுவையை குறைத்து, மிளகு போன்ற காரச்சுவையை அதிகரித்து வந்தாலே நல்ல பலன் கிட்டும். மிதமான அளவு உண்ண வேண்டும். கசப்பு முகத்தைச் சுளிக்கவைக்கும் சுவை. ஆனால், உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியாகச்செயல்படும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.நன்னாரி, சந்தனம், வேம்பு, சீந்தில் மற்றும் பாகற்காய், வெந்தயம், சுண்டைக்காய் போன்றவற்றின் மூலம் கசப்புச் சுவையைப்பெறலாம். உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும்.தொண்டைப் புண்களை ஆற்றும். தோல் நோய்கள், குடல் புழுக்களுக்குக் கசப்பு சிறந்தது. நரம்புத் தளர்ச்சி மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் கை, கால்களில் எரிச்சல் இருக்கும். அந்த எரிச்சலைக் கசப்புத்தன்மைதணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். அதிகமானால்... உடலில் தாதுக்களைக் குறைக்கும். வாயுவை அதிகப்படுத்தும். இதனால் வாயுத்தொல்லை ஏற்படலாம். கசப்பு உணவுகளை அதிகம் வறுத்துச் சாப்பிட்டால் உடல் முழுவதும் வலிகள் வரலாம். கசப்புச் சுவை அளவோடு இருக்க வேண்டும். குறைந்தால்... ரத்தம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். துவர்ப்பு பெரிய நெல்லிக்காய், வாழைப்பூ, நாவல்பழம், அத்தி, கடுக்காய் ,கீரைத்தண்டு, சீரகம், புதினாவிலிருந்து இந்தச் சுவையைப் பெறலாம். பித்த கபத்தைச் சரி செய்யும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். அனைத்து புண்களையும் ஆற்றும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். அதிகமானால்... உடலில் வாயு அதிகரிக்கும். இதயத்தில் வலி ஏற்படலாம். கழுத்து, பின்புற தோள்பட்டைக்கு நடுவில் வலி வரலாம். உடல் எடையைக் குறைக்கும் .ஆண்மைத்தன்மை குறையும். மலச்சிக்கல் பிரச்னை வரும். குறைந்தால்... இரும்புச்சத்து கிரகிக்கும் தன்மையை இழக்கும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.குளிர் காலத்தில், வெளியில் அதிகக் குளிர் இருப்பதால், உடலினுள் அக்னி கொழுந்துவிட்டு எரியும். இதனால், பசி அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் இனிப்பு ஆகாரங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் கொடுத்தால் நன்கு ஜீரணமாகும். வெளியில் சுட்டெரிக்கும் வெயில் இருந்தால், உடலில் வெப்பம் குறைவாக இருக்கும். இதனால் அதிகம் பசி எடுக்காது. எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். சாப்பாட்டின் மீதான ஆர்வம் குறைந்து, உடலில் உப்புச் சத்து வெளியேறுவதால், தண்ணீர், பழச்சாறு,மோர் குடித்தாலே போதும் என்ற நிலை ஏற்படும். இந்தத் தருணத்தில் கோடை கால பழங்கள், நீராகாரங்கள் சாப்பிடலாம். எந்தெந்த காலக்கட்டத்தில் என்ன மாதிரியான நோய்கள் வரும் என்பதை அறிந்து,அதற்கேற்ப சாப்பிட்டாலே, உடல் சீராக இருக்கும்.உடலே உணர்த்தும்! ‘புளிப்பா சாப்பிடனும் போல இருக்கு. . நாக்கு ஏங்கும்போது, வாயில் எச்சில் ஊறும்.உடலில் எனர்ஜி குறையும்போது, சோர்வாக இருக்கும்போது ஒரு ஸ்வீட் சாப்பிடலாமே’ என்று இனிப்புச் சுவை சாப்பிடத்தோன்றும். அதே மாதிரி, பசி சரியாக எடுக்காதபோது,புளிப்பாக சாப்பிடவேண்டும் போல் இருக்கும். வாந்தி, சோர்வு, வயிறு மந்தமாக இருக்கும்போது, எலுமிச்சை ஜூஸ் குடிப்போம். இப்படி உடலானது உணர்வின் மூலம், தன்னைத் தானே சரிபடுத்திக்கொள்ள முயற்சிக்கும். சரியான உணவு உண்டால், மருந்துகள் தேவை இல்லை, உணவு சரியில்லையேல் மருந்தினால் பிரயோஜனம் இல்லை!

Thursday, December 23, 2010

Lead Poisoning..A reply to Deccan Chronicle article

This is the reaction to the published news article today in deccan Chronicle chennai edition, about how ayurvedic medicines in the garb of herbal medicines are causing lead poison in the gullible patients!This is highly misleading and mallicious.
Hailing from an authentic ayurveda family and a staunch believer and practicing consultant of Ayurveda for the last eighteen years,It pains me a lot to see that our Ancient Science is tarnished like this.
The medicines mentioned in this article like Lakshmivilasa rsas (Naradiya) or yogarajaguggulu, by default don’t contain Lead.Mahayogaraja guggulu, indeed contains nagabhasma, which is entirely different from lead people are talking about.
This Lead is not the same Naga Bhasma, mentioned in Ayurveda.The processes described in Ayurvedic texts convert the inorganic metallic lead to a biofriendly medicine,along with improving its thereuputic effect and index.This Naga Bhasma undergoes many physio chemici biologico pharmocological changes and the resultant product is entirely the different from the lead, media is crying hoarse about.
We have spurious drug in any system which are the outcome of substandard drug/Preparation.. So these herbal preparation should be considered as an aberration than allow the results to reflect on the sanctity of a system of medicine
If the JAMA is calling them as ayurvedic drug then all spurious drugs should be called as official drugs of that system.
If a medicine is found to contain the lead more than the allowed measure,Ban the company which makes such drug.Dont condemn the medicine.These formulas are provided in 5000 yr old scriptures,any company can use them for their manufacturing.Lot of lead poisoning comes from defective collective measures of the samples,purifying and processing methods.
Before the media publishes such sensitive news about the system, it should have consulted an expert in Ayurveda.or do they think Ayurveda is an area where they can report anything without actually involving the expert?
It is very true that media creates awareness .Let that be a true awareness..
P.S.
In fact, we prescribe Naga bhasma(Calx of Lead) is prescribed along with silajath bhasma, to check the complications of Diabetes..like chronic kidney disease.:)