Thursday, April 4, 2019

சருமம் பொலிவுடன் திகழ


‘எண்ணெய் தடவுதல்’, நமக்குப் பல வகைகளில் பலன் தருகிறது. சருமம் மெருகேறும். தேவையற்ற செல்கள் உதிர்ந்துவிடும். எண்னெய் தடவுவதால், . 50 வயதினரைக் கூட, 30 வயது என்று சொல்லுமளவு இளமைப் பொலிவு இருக்கும். சருமத்தில் சுருக்கம் விழுவது தடுக்கப்பட்டு, எப்போதும் இளமையாக இருக்கும். 

இரட்டை நாடி இருப்பவர்களும், முகத்தில் சதை இருப்பவர்களும் 30 வயதிலிருந்தே எண்ணெய் மசாஜை ஆரம்பித்துவிட வேண்டும். சிலருக்கு வெயிலில் போய்விட்டு வந்தால், உடலெல்லாம் கருத்துவிடும். நிறம் மங்கி, ‘டேன்’ ஆனவர்கள், ‘குங்குமாதி தைலத்தை’ உபயோகிக்கலாம். இது ‘ஆன்டி டேன்’ ஆக பயன்படும். தினசரி இரவு படும் முன், முகம் மற்றும் உடலில் சூரியக் கதிர்கள் படும் இடங்களிலெல்லாம் இந்தத் தைலத்தைத் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இரண்டு வாரம் தடவினாலே, வெளியில் போகும்போது சூரியனால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைந்துவிடும். 

அதேபோல, பலருக்கு அலர்ஜியும் அரிப்பும் பெரும் தொல்லையாக இருக்கின்றன. அதிலும் பெண்களுக்கு, 45 வயதுக்கு மேல், மெனோபாஸ் ஆனபிறகு, சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. இதனால் அரிப்பும், நிறம் மாறுதலும் உண்டாகின்றன. சிலருக்கு நிறமே கருப்பாக மாறிவிடும். இதைத் டஹ்டுக்க, தோலில் ஈரப்பதம் இருக்கவேண்டும். அந்த ஈரப்பதம், எண்ணெய் தடவுவதால்தான் வரும். இவர்களுக்கு ‘தூர்வாதி தைலம்’ என்ற எண்ணெய் சிறந்த பலன் தரும். ஒருவகை தர்ப்பை புல்லைப் போட்டுக் காய்ச்சிய இந்தத் தைலத்தையும் ஏற்கெனவே குறிப்பிட்ட குங்குமாதி தைலத்தையும் ஒன்றாகக் கலந்து, கை, கால்களில் தேய்த்து வந்தால், சருமத்தில் ஏற்பட்ட கருமை மாறிவிடும். சரும வறட்சி குறைந்து, அரிப்பு நின்றுவிடும்.
சருமம் பொலிவுடன் திகழம்



Tuesday, April 2, 2019

மாதத்திற்கு இரண்டு கிலோ எடை குறைய வேண்டுமா? மதிய உணவாக பார்லி உண்ணுங்கள்

பார்லி வெஜிடபிள் ரைஸ்
தேவையானவை: பழுப்பு நிற பார்லி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடமிளகாய், கேரட் போன்ற நார்ச்சத்துள்ள காய்கறிகள், பட்டை, இலை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எண்ணெய்.
செய்முறை: பார்லியை புலவு செய்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் கழுவி, ஊறவைக்கவும். பிறகு, ஒரு பங்கு பார்லிக்கு 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் சேர்த்து, சாதம் வடிப்பது போலவே பார்லி சாதம் வடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, பார்லியைச் சேர்த்து, நன்கு வெந்ததும், கஞ்சியை வடித்துவிடவேண்டும். பொதுவாகவே, சாதம் வடிக்கும்போது, கஞ்சியை வடித்துவிட்டால், அதிலிருக்கும் ‘ஸ்டார்ச்’ போய்விட்டாலே, உடலுக்கு நல்லதுதான். ஊளைச்சதை குறையும். வடித்த பார்லி சாதத்தை, ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆறவிடவும். காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். 
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி என ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பிறகு, நீளவாக்கில் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, துளி உப்பு சேர்த்து, ஒரு வதக்கு வதக்கவும். அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். காரம் அதிகம் தேவைப்பட்டால், கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். முக்கால்வாசிப் பதம் வெந்தபிறகு, ஏற்கெனவே வேகவைத்த பார்லியை எடுத்துப் போட்டுக்கிளறி, அடுப்பை ஸிம்மில் வைத்து, மூடிவைத்து, ‘தம்’ கட்டலாம். இதனால், நிதானமாக தண்ணீர் வற்றி, காய்கறிகளின் சுவை பார்லியில் இறங்கி, அதிக ருசியாக இருக்கும். இடையிடையே அடிபிடிக்காமல் கிளறிவிடலாம். இது மதிய உணவுக்கு நல்ல சாய்ஸ்.  
குறிப்பு: 
* வெள்ளை பார்லியை உபயோகிப்பதென்றால் அதை ஊறவைக்கத் தேவையில்லை. அப்படியே கழுவி விட்டு உபயோகிக்கலாம். 
* பார்லி சாதம் வடித்த கஞ்சியில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, வீட்டில் இருக்கும் முதியோர் அல்லது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். நல்ல உடல் பலத்தைக் கொடுக்கும்.
* பார்லியை வெறும் வெள்ளை சாதமாக வடித்து, நாம் தினமும் செய்யும் காய்கறி, குழம்போடும் சாப்பிடலாம். 

பயன்கள்:
* இந்த பார்லி வெஜிடபிள் புலவை தினசரி மதிய உணவாகச் சாப்பிட்டு வந்தால், மாசத்துக்குக் குறைந்தபட்ச, தலா 2 கிலோ குறையும். பார்லியின் மருத்துவ குணம் என்னவென்றால், கொழுப்பைச் சுரண்டி எடுத்தல் (கரைத்தல்) மற்றும் கொழுப்பை வளர விடாமல் குறைத்தல். இது போன்ற குணங்களை உடைய பார்லியைச் சாப்பிடுவதால், நிச்சயமாக உடலில் இருக்கும் ஊளைச்சதை குறையும். 
* பல பெண்களுக்குக் காலையில் போடும் பிளவுஸ் சரியாக இருப்பதாகவும் மாலையில் இறுக்கமாகி விடுவதாகவும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மாலையில் உடல் ஊதும். இப்படி வந்தால், தேவையில்லாத கெட்ட நீர் உடலில் சேர்கின்றது என்று அர்த்தம். இது போல கெட்ட நீர் சேர்பவர்களுக்கு, தினமும் மதியம் பார்லி அரிசி உணவைச் சாப்பிட்டு வர, மாலையில் உடலில் கெட்ட நீர் சேராது. 
* அரிசி சாதத்தை விட, பார்லி சாதம் ‘லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ கொண்டது. ரத்தத்தில் சீக்கிரமாக சர்க்கரையை வெளிவிடாது. 

Saturday, March 23, 2019

அருகம்புல் ஜூஸ்! நல்லதா ,கெட்டதா?



எப்படி ஒரே மருந்து எல்லாவித பிரகிருதிகளுக்கும் பொருந்தாது என்பதற்கு  ஒரு அருமையான உதாரணம் அருகம்புல் ஜூஸ். காலையில்  கடற்கரையில் வாக்கிங் போகும் பலரும் அருகம்புல் ஜூஸை குடிப்பார்கள்.. இது மூலிகையில் இருந்து எடுத்த ஜூஸ் அதனால் உடம்புக்கு மிகவும் நல்லது  என்று பலரும் நினைப்பதுண்டு.
அருகம்புல் நல்லதுதான் ஆனால் யாருக்கு நல்லது? பித்த உடம்புகாரர்களுக்கு மிகவும் நல்லது. இதிகாசத்தில் இதைப்பற்றி ஒரு கதையே உண்டு .
அனலாசுரன் என்ற ஒரு அசுரனை பிள்ளையார் விழுங்க அவர் தொப்பை முழுவதும் பற்றி எரிந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது எதிலும்  குறையாத இந்த எரிச்சல் அருகம்புல் ஜூஸை குடித்ததால் குறைத்தது என்ற ஒரு குறிப்பு உண்டு.
அருகம்புல்லிற்கு "ஹீமோஸ்டேடிக்"  என்ற ஒரு குணம் உண்டு அதாவது ரத்தத்தை உறையச் செய்யும் குணம் அதனாலேயே அதிக ரத்தப்போக்கு உடைய பெண்களுக்கு அருகம்புல் ஜூஸ் குடித்தால் ரத்தப்போக்கு கட்டுப்படும்.
இதய நோய் உள்ளவர்களுக்கு "பிளட் தின்னர்"  மருந்து கொடுப்பார்கள் அதாவது ரத்தம் ரத்தக்குழாய்களில் உறையாமல் இருப்பதற்கான மருந்து கொடுப்பார்கள். இதுபோன்ற மருந்தை எடுக்கும் வயதானவர்கள் உடம்புக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டு அருகம்புல் ஜூஸ் குடிக்க
அவர்கள் எடுக்கும் பிளட் தின்னரும் ,அருகம்புல் ஜூஸும் வினைப்பயன் புரிந்து உயிருக்கே வேட்டு வைக்கலாம்.
அதனால் நல்லது என்று நினைத்துக்கொண்டு கண்டதையும் சாப்பிடாமல் எந்த ஒரு மருந்தையும் மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும். அதேபோல் டிவி ஷோக்களில் வரும்  மூலிகை மருந்துகளை நமக்கு நல்லது என்று எண்ணிக்கொண்டு சாப்பிட வேண்டாம்.